இன்று பிறந்தநாள் காணும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்து வந்த பாதை!

ஜனநாயக வழியில் நம்பிக்கை

2017ம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகம் போராட்டங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம். அதற்கு காரணம் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி. தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களுக்கு கூட உரிய முறையில் அனுமதி அளித்தது அதிமுக அரசு. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு ஜனநாயக வழியில் இயங்கியதால் தான் இது சாத்தியமானது.

அதிமுகவின் ஒளிவிளக்கு

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வரலாற்றின் முக்கியமான மாதம். எம்ஜிஆரின் மறைவுக்குப்பிறகு 1989ல் நடந்த அதே வரலாறு தமிழகத்தில் மீண்டும் திரும்பியது.. அதிமுக மூழ்கிவிடும் என்று எண்ணி கற்பனைக் குதிரையை ஓடவிட்டுக் காத்துக்கொண்டிருந்தன எதிர்க்கட்சிகள். ஆனால், அப்போது அதிமுகவின் ஒளி விளக்காக வந்து கட்சியைத் தாங்கிப்பிடித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

மாங்கனி நகரம் தந்த வழிகாட்டி

மாங்கனி நகராம் சேலத்தில் இருந்து ராஜாஜிக்குப்பிறகு வந்த 2வது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி…. எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லாத ஒருவருக்கு முதல்வர் பதவியா? என்று வாரிசு அரசியலில் திளைத்த பல கட்சிகளும் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தன. 3 மாதங்களில் ஆட்சிக் கலைப்பு, 6 மாதங்களில் ஆட்சிக்கலைப்பு என எல்லாவற்றையும் பொய்யாக்கி 4 ஆண்டுகாலம் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி.

நெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்

ஆரம்பப்பள்ளிக்குக்கூட சிலுவம்பாளையத்தில் இருந்து 4 மைல் தூரம் நடந்து சென்று படிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் காவிரி ஆற்றில் நீந்திக்கடக்க வேண்டியிருந்தது. அந்தப்படிப்பினைதான் பின்னாட்களில் எத்தனை நெருப்பாற்றிலும் நீந்திக்கடந்து தமிழகத்தையே ஆட்சிசெய்யும் ஆற்றலைத் தந்தது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு.

அதிமுகவின் உண்மைத் தொண்டர்

எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது தன்னையும் கழகத்தில் இணைத்துக்கொண்டவர் எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி என்று காலங்காலமாய் கட்டுக்கோப்பாய் வளர்ந்த கட்சியில் சிலுவம்பாளையம் கிளைக்கழக செயலாளராக கிடைத்த முதல் பதவி தொடங்கி முதல்வராக பதவி ஏற்றது, பொதுச்செயலாளரானது வரை, அன்றிலிருந்து இன்றுவரை அஇஅதிமுகவிற்கு உண்மையான ஓர் தொண்டனாகவே தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

புரட்சித்தலைவியின் குட்புக்கில் இடம்பிடித்தவர்

புரட்சித்தலைவி ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித்தலைவராக முதன்முதலில் சட்டசபைக்குள் நுழைந்த 1989ம் ஆண்டுதான் சட்டமன்ற உறுப்பினராக முதன்முதலில் சட்டசபைக்குள் நுழைந்தார் எடப்பாடி கே.பழனிசாமி.1991ல் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய ஜெயலலிதா, 1998ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதி எம்.பி ஆக்கி டெல்லிக்கு அனுப்பிவைத்தார். இப்படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குட்-புக்கில் என்றுமே தனக்கு என்று ஓர் நிரந்தர இடம் பிடித்திருந்த வர் எடப்பாடி பழனிசாமி.

புரட்சித்தலைவியால் மாற்றப்படாத அமைச்சர்

2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன், எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார் புரட்சித்தலைவி. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நால்வர் அணியிலும் தொடர்ந்து இடம்பெற்றிருந்தார். நிர்வாக வசதிகளுக்காக அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டபோதும், என்றுமே, எதற்காகவுமே, ஜெயலலிதாவால் மாற்றப்படாத அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தேடி வந்த முதல்வர் பதவி

2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு அதே எடப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. நாடாளுமன்ற உறுப்பினராக மக்களையிலும், மாநிலங்களவையிலும் தன் இருப்பை பதிவு செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒவ்வொரு படியாக வளர்ந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியை நாடிச் செல்லவில்லை. அந்தப்பதவியே அவரைத் தேடி வந்தது.

அதிமுகவின் தலைமகன்

1989ல் அஇஅதிமுக பிளவைச் சந்தித்தபோது, புரட்சித்தலைவியின் பக்கம் நின்று அவர் ஆசி பெற்ற எடப்பாடி பழனிசாமி, 28 ஆண்டுகள் கழித்தும் அதே உறுதித்தன்மையோடு, அதிமுகவின் பக்கம் நின்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு 2017ல் முதல்வராக அரியணையில் ஏறினார். தாயை இழந்து தவித்த அதிமுகவை, தாய்க்குத் தலைமகனாய் நின்று வழிநடத்திக் கொண்டிருக்கிறார். கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்தச் சிக்கலும் வராமல் கட்டிக் காத்திருக்கிறார்.

இரும்பு தேசத்து கரும்பு மனிதர்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்புத்தொகுப்பு கொடுக்கும் திட்டம் குறித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்களோடு மேற்கொண்ட ஆலோசனையின்போது, பொங்கல் பரிசுத்தொகுப்பு கொடுக்க வேண்டும் என்றும், அதில் கரும்பையும்
சேர்ந்து வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளின் பக்கம் நின்று வலியுறுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் நலன் காக்கும் விவசாயி அவர் என்பதை தற்போதைய திமுக ஆட்சியிலும் பொங்கலுக்கு கரும்பு வழங்கச் செய்ததன் மூலம் நிரூபித்துக்காட்டியிருக்கிறார் நம் இரும்பு தேசத்து கரும்பு மனிதர்…

சீர் மிகு முதலமைச்சர்

பள்ளிக்காலத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அளவிலான சாப்ஃட்பால் போட்டியில் ரன்னர்அப்பாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், விளையாட்டு வீரர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழக அரசே, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்களை வாங்கிகொடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் விளையாட்டுத் திடல்களை சீர்செய்து கொடுத்து இளைஞர்களை விளையாடச் சொல்லும் சீர்மிகு முதலமைச்சர் என்று பெயரையும் தட்டிச் சென்றிருக்கிறார்.

கல்வி வளர்ச்சியில் அக்கறை

2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து இறங்கியபோது தமிழகத்தில் கல்வி வளர்ச்சி வெறும் 34 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால், அதன் பின்னான அதிமுகவின் 10 ஆண்டுகால தொடர் முயற்சிகளின் காரணமாக கல்வி வளர்ச்சியில் சுமார் 52 சதவீதத்தை எட்டியிருக்கிறது தமிழகம். அதற்கு மிக முக்கியக் காரணம் கல்வி வளர்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகள்தான். இதன் விளைவு தமிழகத்தில் பிறக்கும் 99 சதவீத குழந்தைகள் ஆரம்பக்கல்வியை கற்கிறார்கள்.

 

கல்வியில் சிறந்த தமிழகம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நான்கு ஆண்டுகால ஆட்சியில் மட்டும் தமிழகம் முழுக்க சுமார் 77 கலை அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்பட்டன. அதாவது மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி எனும் அளவிற்கு பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்களுக்குத் தேவையான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி கல்வியில் சிறந்த தமிழ்நாடாக உருவாக்கியிருக்கிறார் நம் முன்னாள் முதலமைச்சர்..

குடிமராமத்து நாயகன்

எடப்பாடி பழனிசாமியின் தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. எந்த ஆட்சியிலுமே தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். எல்லா நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தன. ஓர் விவசாயியின் ஆட்சியில் பசுமைத் தமிழகம் உருவானது. அவிநாசி – அத்திக்கடவு திட்டப்பணிகளை துரிதப்படுத்தியதும், நடந்தாய் வாழி காவேரி திட்டம் கொண்டுவந்ததும் எடப்பாடி பழனிசாமி.

காவிரி காப்பாளன்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை, ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட அவருக்கு காவிரிக் காப்பாளன் என்ற பட்டத்தையும் டெல்டா விவசாயிகள் வழங்கியுள்ளனர்.

மாசற்ற தமிழகம் உருவாக்கியவர்

இயற்கைக்கு எதிரி பிளாஸ்டிக். அதை உணர்ந்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தி, மாசற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிரடியாகத் தடை விதித்தார். இதெல்லாம் தமிழகத்தில் சாத்தியமா? என்று ஒட்டுமொத்த இந்தியாவே புருவம் உயர்த்தியது. ஆனால், அதை செய்து காட்டியவர் எடப்பாடி பழனிசாமி.

அந்நிய முதலீடுகளை ஈர்த்தவர்

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அந்நிய மூதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காகவும்தான் இந்தப் பயணம் அரங்கேறியது. 40 ஆண்டுகளாக தமிழகத்தின் எந்த முதலமைச்சரும் செய்யாத ஓர் பெரும் சாதனையை செய்து காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

தொழில் மாநிலமான தமிழகம்

எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாடு பயணத்தால் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதோடு, பல்லாயிரக்கனக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் உறுதியாகியது. அதே போல 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டினார். அதேபோல கொரோனா ஊரடங்கு சமயத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக விளங்கியது தமிழ்நாடு மட்டும்தான். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்ட எடப்பாடியாரின் டெடிகேஷனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி அது.

தமிழகத்தின் சிற்பி

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்தான் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டத்தில் இருந்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்திலிருந்து மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை என்று தனி மாவட்டங்களை உருவாக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் 38 மாவட்டங்களை உருவாக்கிய தமிழகத்தின் சிற்பி எடப்பாடி பழனிசாமி.

தொண்டர்களின் தலைவர்

கடைக்கோடி தொண்டனும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொண்டிருப்பவர் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. தொண்டர்களை அரவணைப்பவர், அணுகுவதற்கு எளிமையானவர், ஆக்கப்பூர்வமான தலைவர் என்று ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களாலும் கொண்டாடப்படுபவர் எடப்பாடி கே.பழனிசாமி.

 

 

Exit mobile version