2020 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு புனிய யாத்திரை செல்வது வழக்கம். சவுதியில் உள்ள மெக்காவில் ஹஜ் யாத்திரை செல்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், ஹஜ் பயணத்திற்கு இனி ஆன்லைனில் (www.hajcommittee.gov.in) மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என இந்திய ஹஜ் யாத்திரை குழு அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மெக்கா செல்பவர்கள் ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணைத்தளத்திலும், Hcol என்ற செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.