சர்வதேச ஓபன் செஸ் போட்டி: இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சென்னை மாணவன் சாதனை

 

சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி சாதனை படைத்து உள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னையை சேர்ந்த 12 வயது மாணவன் குகேஷ் டெல்லியில் நடைபெறும் 17-ஆவது சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சக வீரர் டிகே.சரமாவை வீழ்த்தினார். இதன் மூலம், உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்தார்.

2002 ஆம் ஆண்டு உக்ரைனின் செர்ஜி கார்ஜகின், 12 வயதில் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை படைத்தார். இந்தநிலையில், குகேஷ் தனது 12 வயதில், சென்னையின் மற்றொரு வீரர் பிரகனந்தாவின் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் சாதனையை முறியடித்தார். சிறுவன் குகேஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version