தவறான தேர்வு மையத்திற்கு மகளை அழைத்து சென்ற அப்பா..20 கிமீ தொலைவில் இருக்கும் சரியான தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் அதிகாரி..ராயல் சல்யூட் செய்யும் நெட்டிசன்கள்!

குஜராத் மாநிலத்தில் தற்போது போர்ட் எக்சாம் நடந்துவருகிறது. நேற்றைய தினம் தந்தை ஒருவர் தன் மகளை தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகுதான் தெரிய வந்துள்ளது, அவர் கூட்டிச் சென்ற தேர்வு மையம் தவறான தேர்வு மையம் என்று. அத்தேர்வு மையத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள் உங்களது மகளின் தேர்வு மையம் இங்கிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதனால் என்ன செய்வது என்று தடுமாறிய நிலையில் இருந்துள்ளார். மேலும் உடன் இருந்த மகளும் இதனால் மிகவும் பதட்டமாக இருந்தார். இதனை அருகிருந்த காவல் அதிகாரி பார்த்து வந்தார்.

 

பிறகு அந்தப் பெண்ணை இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சரியான தேர்வு மையத்திற்கு காவலரே கூட்டிச் சென்றுள்ளார். மாணவியும் நல்ல முறையில் தேர்வினை எழுதியுள்ளார். இந்தச் செய்தியானது நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. டிவிட்டர், முகநூல் என்று அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த செய்தியினை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

Exit mobile version