தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால் மாநிலம் முழுவதும் நீர்மட்டம் சராசரியாக 3 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கம், குடிமராமத்துப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக, மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 3 மீட்டர் வரை உயர்ந்திருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 2 மீட்டர் அளவுக்கு கணிசமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி, மாதவரம் பகுதிகளில் 3 முதல் 2 மீட்டர் வரையும், ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் 1 முதல் 2 மீட்டர் வரையும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.