மதுரை மேலூர் பகுதிகளில், முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி தனியார் பட்டா நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தவைகளை அரசுடைமையாக்கக் கோரிய வழக்குகள், மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலுரை சுற்றியுள்ள கீழவளவு, இ.மலம்பட்டி, கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பிஆர்பி கிரானைட், மு.க அழகிரி மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் கிரானைட், திமுக மாவட்ட செயலாளர் வேலுச்சாமியின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள், அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய நிலையில், முறைகேடாக வெட்டி எடுத்து, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களை அரசுடைமையாக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் 31 வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் தொடரப்பட்ட, 12 வழக்குகளும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பழனிவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, மே மாதம் 22ம் தேதிக்கும், 29ம் தேதிக்கும் வழக்குகளை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.