தனி ஆளாக விவசாயம் செய்து வரும் பாட்டி

தன் கையே தனக்கு உதவி என்பதை போல, தனது இரண்டு மகன்களும் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தன்னந்தனியே வயலில் நின்று விவசாயம் செய்து வரும் திண்டுக்கல் ஒத்தக்கடையை சேர்ந்த கருப்பாயி பாட்டி குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை பார்கலாம்…..

திண்டுக்கல்லை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி அம்மாள். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தில் வேலை செய்துவருகின்றனர். இதனால், தனி ஆளாக தோட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார் கருப்பாயி பாட்டி.

தனது தோட்டத்தில் சீசன் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற வகையில் விவசாயம் செய்துவரும் கருப்பாயி பாட்டி, தற்போது, சம்பங்கி, செண்டு மல்லி, அகத்திக்கீரை, கரும்பு உள்ளிட்டவைகளை சாகுபடி செய்துள்ளார். இதற்கு தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்டவைகளை செய்து பராமரித்து வரும் கருப்பாயி பாட்டி, கொளுத்தும் வெயிலிலும், விவசாய பணிகளை செவ்வனே செய்துவருகிறார்….

தள்ளாடும் வயதிலும் விவசாயத்தை காப்பதற்காகவே இதுபோன்ற வேலைகளை செய்துவருவதாகவும், கூலிக்கு ஆட்கள் கிடைக்காததாலும், தானே முன்னின்று அனைத்து பணிகளையும் செய்வதாக கருப்பாயி பாட்டி கூறுகிறார். விவசாயத்தை காப்பாற்ற பல தரப்பினரும் குரல் கொடுத்துவரும் நிலையில், தானே வயலில் இறங்கி விவசாயத்தை காப்பாற்றிவரும் கருப்பாயி பாட்டியின் பணி சிறந்ததே….

Exit mobile version