ஜெயங்கொண்டம் அருகே கேந்தி பூக்கள் சாகுபடியில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த சிலால் கிராமத்தில், கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் வேலைக்கு காத்திருக்காமல் விவசாயத்தை கையில் எடுத்திருக்கின்றனர். இந்த கிராமத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் மாலை கட்ட பயன்படும் கேந்திப்பூக்கள் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் கேந்திப்பூக்கள் சாகுபடியில் ஈடுபடுவதாக கூறும் இளைஞர்கள், நிலக்கடலை, செங்கரும்பு, செடிமுருங்கை என பருவத்திற்கு ஏற்றாற்போல் பயிர் செய்து வருவதாக கூறுகின்றனர்.