1988 ஆம் ஆண்டு ’குரு சிஷ்யன்’ திரைப்படம் மூலம் நடிகை கௌதமி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.பின்பு பல படங்களில் நடித்து பாராட்டையும் பெற்றார்.
தற்போது ‘life again ‘ என்ற தொண்டு நிறுவனம் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.இந்த நிறுவனம் தன்னம்பிக்கை, வாழ்க்கையின் முக்கியத்துவம்,புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான மனவலிமையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் நடிகை கௌதமி புத்தாண்டு கொண்டாட்டத்தை துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து கொண்டாடி,அவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்வித்துள்ளார்.மேலும் , நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை,இந்த புத்தாண்டை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.