14 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்ற அரசாணை வெளியீடு

14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

41 உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். அந்தவகையில் முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படுகிறது. மீதமுள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக வரும் காலங்களில் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதனால் கல்வி கட்டணம் குறையும் என்றும் 777 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version