சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு எந்த வசதியும் அரசு செய்யவில்லை – அமித் ஷா

அய்யப்ப பக்தர்களை வதை முகாம்களில் உள்ளவர்களை போல் கேரள அரசு நடத்துவதை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்து டுவிட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உணர்வு பூர்வமான சபரிமலை விவகாரத்தை கேரள அரசு கையாளும் முறை ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இளம்பெண்கள், தாய்மார்கள், வயதானவர்களுக்கு உணவு, தங்குமிடம், கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் செய்து தராமல் கேரள போலீஸார் அவர்களை கடினமான யாத்திரைக்கு தள்ளுவதாக கூறியுள்ளார்.

கைது நடவடிக்கை மூலம் மூலம் சபரிமலை மக்கள் இயக்கத்திற்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்கலாம் என்று நினைத்தால் பினராயி விஜயன் ஏமாந்து போவார் என்றும், சபரிமலை பாரம்பரியத்தை காக்க நினைக்கும் ஒவ்வொரு பக்தர்களுடனும் நாங்கள் துணை நிற்போம் என கூறியுள்ளார்.

Exit mobile version