ஆந்திராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த எம்.எல்.ஏ சர்வேஸ்வர ராவ் மகன், கிடாரி சரவன்குமார். ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை உருவானது. அதன்பிறகு 2017-ம் ஆண்டு மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக நேற்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செப்டம்பர் மாதம் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் மகன், கிடாரி சரவன்குமார் மலைவாழ் மக்கள் நலத்துறை அமைச்சராகவும், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.சி. பரூக் அப்துல்லா சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Exit mobile version