இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் அரசு சிறப்பாக செயல்படுகிறது

இந்தியாவின் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சார்ஜா நாட்டின் இளவரசி ஷெய்கா ஹென்ட் பைசல் அல் ஹுஸ்ஸாமி தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பெண்களின் அதிகாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா இளவரசி ஷெய்கா ஹுஸ்ஸாமி, ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றார்.

கல்வி கற்பதில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அவர், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பங்களால் வாழ்வில் சாதிக்க முடியும் என்று கூறினார்.

இதனிடையே அரசு வழங்கி வரும் நலத்திட்டங்களை பயன்படுத்தி ஆண்களை விட பெண்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் பெண்களை பாதுகாப்பதிலும், கல்வி வழங்குவதிலும் இந்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக சார்ஜா இளவரசி பாரட்டினார்.

Exit mobile version