புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணமடைந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரனும் அடங்குவர். உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தாருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை தமிழக அரசு வழங்கியதோடு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்து. இந்நிலையில், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சிவசந்திரனின் மனைவி காந்திமதி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.