பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான ஏல விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது…

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் நிறுவனத்தை விற்பது தொடர்பாக மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள 52 புள்ளி 98 சதவீத பங்கு மூலதனத்தை முழுமையாக விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் தேதி வரை வரவேற்கப்பட உள்ளதாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் இந்த ஏல விற்பனையில் பங்கேற்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நுமலிகார்க் ரீபைனரி நிறுவனம் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகள்,  பொதுத் துறையின் எண்ணெய்-எரிவாயு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது

Exit mobile version