சிறுவனின் வாய் தாடையில் இருந்த கட்டியை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

சென்னையை சேர்ந்த சிறுவனின் வாய் தாடையில் வளர்ந்த ஒன்றரை கிலோ எடையுள்ள கட்டியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த வினோத் – பிரியா தம்பதியின் 7 வயது மகன் எபினேசருக்கு, கீழ் தாடையில் உருவான கட்டி, நாளுக்கு நாள் வளர்ந்ததால் பேச முடியாமல் ஒன்றரை ஆண்டுகளாக சிறுவன் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை சிறுவன் எபினேசர் அனுமதிக்கப் பட்டார்.

பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் விமலா வழிகாட்டுதலின் படி வாய், முக அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரசாத், பேராசிரியர் பாலாஜி, இணைப் பேராசிரியர் அருண்குமார், மயக்கவியல் நிபுணர் கிருஷ்ணன், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது.

அதன்படி, 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் வாய் தாடையில் இருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு அரசு பல் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 

Exit mobile version