சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு104 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையில் 24 காரட் தங்கம் கிராமுக்கு நேற்றைய விலையான 3 ஆயிரத்து 815 ரூபாயிலிருந்து 13 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 828 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு நேற்றைய விலையான 3 ஆயிரத்து 658 ரூபாயிலிருந்து 13 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 671 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையிலிருந்து மாற்றம் ஏதும் இன்றி கிராம் ஒன்று 51 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 51 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.