தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!

தங்கம் விலை கடந்த சிலதினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து,43 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை இன்று மட்டும் 35 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் ஒரு சவரன் தங்கம், 50 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர். சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

YouTube video player

Exit mobile version