ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 504 உயர்ந்து 26 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 63 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 279 ரூபாய்க்கும் சவரனுக்கு 504 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகளும், கிலோவிற்கு 300 ரூபாயும் உயர்ந்து ஒரு கிலோ 40 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version