"கடவுளின் கை" விண்ணில் தோன்றியதா? – நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

வானில் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அறிந்து கொள்ள ஏராளமான நாடுகளின் செயற்கைக் கோள்கள் விண்ணில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நாசா அனுப்பிய நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தொலைநோக்கி அர்ரே (Nuclear Spectroscopic Telescope Array) தொலைதூர வானியல் நிகழ்வுகளை படம் பிடித்து புவிக்கு அனுப்பி வருகிறது. அதன்மூலம் கிடைத்த அண்மைய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் கை போன்ற வடிவில் விண்பொருள் ஒன்று தென்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு அதன்மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் கை போன்ற வடிவை உருவாக்கியுள்ளன.

வெடிப்பில் வெளியான பருப்பொருட்கள் நிஜமாகவே கை போன்ற வடிவத்தை உருவாக்கியதா அல்லது பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா என்பது பற்றிய விளக்கம் இல்லை. சாதாரண மனிதர்கள் அதை ‘கடவுளின் கை’ என்றே குறிப்பிடுகின்றனர். இருப்பினும் விண்ணில் தோன்றிய இந்த உருவம் ‘கடவுளின் கை’ என்று பெயர் சூட்டப்பட்டு வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

 

Exit mobile version