முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மொத்தம் 14 ஆயிரத்து 250 கோடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.

7 ஆயிரம் கோடி ரூபாயில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், 3 ஆயிரம் கோடி ரூபாயில் எம்.ஆர்.எப். லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களை துவக்க முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்நிலையில், இந்த தொழில் திட்டங்களுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பொழுது 12 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version