மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று கோவையைச் சேர்ந்த காயத்ரி நடராஜன் சாதனை

பிலிப்பைன்ஸில் நடந்த மிஸஸ் யுனிவர்ஸ் போட்டியில் கோவையைச் சேர்ந்த காயத்ரி நடராஜன் என்பவர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் .

பிலிப்பைன்ஸில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் என்பவர பங்கேற்று பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாதனைக்கு வயது ஒரு தடையாகாது என்றும் திருமணத்திற்கு பிறகு தான் தாம் பல சாதனைகள் படைத்ததாகவும் கூறுகிறார் காயத்ரி நடராஜன். இவர் நீச்சல் வீராங்கனை, பரத நாட்டிய கலைஞர், பாடகி, பல் டாக்டர் என பல துறைகளிலும் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version