தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு கருடசேவை

திருவண்ணாமலை மாவட்டம் தென்னங்கூர் கிராமத்தில் உள்ள பாண்டுரங்கன் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமிக்கு, அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் பாண்டுரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியில் பாண்டுரங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருடவாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார்.

இந்த கருட சேவை நிகழ்ச்சியில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், திருப்பதி மலை முகட்டில் இயற்கையாக அமைந்துள்ள ஏழுமலையான் உருவச்சிலைக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. உள்ளூரைச் சேர்ந்த ஏராளமானோர், ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 40 அடி நீளத்தில், துளசி மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் ஆன மாலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டது.

Exit mobile version