சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த சிலைகள் அனைத்தும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகின்றன. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள செய்யப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊர்வலத்தினர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், மத வெறுப்புகளை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பக்கூடாது. என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலைகள் கரைக்கும் கடற்கரைப் பகுதிகள் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உயர்கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படுவதால் ஈ.வே.ரா சாலை, வள்ளுவர் கோட்டம், நூங்கம்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கு ஏற்றவாறு, பொதுமக்கள் பயண திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.