திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரக சரக்கு வாகனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகரத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலம் தொடங்கியவுடன் அவிநாசி சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் புஷ்பா நகர் சந்திப்பு மற்றும் வடக்கு ஆர்டிஒ அலுவலக சந்திப்பில் பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் எனவும், இங்குள்ள ஆலங்காடு பகுதியில் பொதுகூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.