வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தம்

வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நாடு முழுவதும் வனப்பகுதிகளில் பட்டா இல்லாமல் 11 லட்சத்து 8 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களை வனப்பகுதிகளில் இருந்து 6 மாதங்களில் வெளியேற்ற கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுகுறித்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நாடு முழுவதும் 21 மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

Exit mobile version