லாட்டரி அதிபர் மார்ட்டினின் சுமார் 119 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்ட விரோத பணபரிவர்த்தனை செய்ததாக லாட்டரி அதிபர் மார்டின் மீது அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து மார்ட்டினின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இதில், மார்ட்டினுக்கு சொந்தமான 61 வீடுகள், கட்டிடங்கள், 85 காலி மனைகளில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில், சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை மற்றும் வருவாயை மறைத்து முதலீடுகள் செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் தொழிலதிபர் மார்ட்டினின் சுமார் 119 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.