தச்சூரில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், மனம் அறக்கட்டளை சார்பில், மதுராந்தகத்தை அடுத்த தச்சூரில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சென்னை மனம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், பொது மருத்துவம், இதய பரிசோதனை, பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதில், மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர். இதில், கலந்துகொண்ட அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது. 

Exit mobile version