சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீபாவளியையொட்டி வெடி விபத்துக்களில் தீக் காயமடைந்த 14 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தினால் இதுவரை 14 பேர் லேசான தீக் காயத்துடன் சிகிச்சை பெற்றதாகவும், அவர்களது உடலில் 4 சதவீதம் மட்டுமே தீக்காயம் அடைந்துள்ளதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், புஸ்வாணம் வெடிக்கும் போது தீக்காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்..