100 ஆண்டுகள் பழமையான கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

கோவை மாவட்டம் கப்பளாங்கரையில் உள்ள மகாலட்சுமி கோவிலில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கப்பளாங்கரை மகாலட்சுமி கோவிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 5 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களால் இந்தக் கோவிலுக்கு ஐம்பொன்னால் ஆன இரண்டு மகாலட்சுமி அம்மன் சிலைகள் மற்றும் இரண்டு பெருமாள் சிலைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு பூஜை செய்வதற்காகப் பூசாரி கோவிலைத் திறந்த போது சிலைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் காணாமல் போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version