குருவியாக செயல்பட்ட நபரிடம் பேரம் பேசியதற்காக 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜெயகௌரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவெல்லிக்கேணி பெரிய தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவர் மலேசியாவில் இருந்து பொருட்களை மலிவு விலையில் வாங்கி சென்னையில் விற்று வருகிறார். இந்தநிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ராஜசேகர், காவலர்கள் அசோக் குமார், சன்னிரால்டு, ஆனந்தன் ஆகியோர் சாகுல் ஹமீதிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டதோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சாகுல் ஹமீது அளித்த புகார் கொடுத்ததன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜெயகௌரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.