கோவையில் இரண்டு பேரை கொடூர ஆயுதங்களால் வெட்டிய 4 பேரை 24 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு திரும்பிய பிரதீப், தமிழ் ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் கொடூர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தீவிரமாக வலைவீசி தேடினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கணபதி காமராஜர் புரத்தைச் சேர்ந்த தனபால், சூர்யா, ஹரி சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரதீப், தமிழ் ஆகியோரை முன்பகை காரணமாக 4 பேரும் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.