வேலூர் அருகே மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாடுகள் உயிரிழந்தன

வேலூர் அருகே மாட்டுப் பண்ணையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பை சேர்ந்த தேவா என்பவர், அதே பகுதியில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 10 வருடங்களாக மாட்டுப் பண்ணை மற்றும் மீன் பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மாட்டுப் பண்ணைக்கு அருகில் உள்ள மின் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பண்ணையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 மாடுகள் உயிரிழந்தன. மேலும் இரண்டு மாடுகள் பலத்த தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version