பிரபல பெண் கஞ்சா வியாபாரிகள் உட்பட 4 பேர் கைது

சென்னையில் பிரபல பெண் கஞ்சா வியாபாரிகள் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

புளியந்தோப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், துணை ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் முருகேசன், துணை காவல் ஆய்வாளர் சசிராஜன் இருவரும் புளியந்தோப்பு பகுதியில் 2 பெண்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விபாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், வேலழகி, அஞ்சலை, கார்த்திகேயன், விஷ்ணு ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version