மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி காலமானார்

மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி காலமானார். டெல்லி ஷாகெட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.டி.திவாரி சிகிச்சை பலனின்றி காலமானார்.

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற திவாரி, உத்தரபிரதேச மாநில காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தார். அந்த மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவர். 

ராஜிவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராகவும்,  ஆந்திர ஆளுநராகவும் பதவி வகித்தார்.

வயது முதிர்வின் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர் 92 வயதில் இன்று காலமானார் 

Exit mobile version