கணித மேதை ராமானுஜத்தின் வீட்டிற்கு சென்ற மொரீசியஸ் முன்னாள் அதிபர்

கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் வீட்டிற்கு வருகை தந்த மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, அங்கு அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.   

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் அருகே உள்ள  கணித மேதை ராமானுஜத்தின் இல்லத்திற்கு, மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்தார். அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள அந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த,  சீனிவாச ராமானுஜன் தொடர்பான அரிய புகைப்படங்களை அவர் ஆர்வத்துடன் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து முக்கியப் பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் தனது வருகையைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரமசிவம் பிள்ளை வையாபுரி, கணிதம் கடவுளின் மொழி என்றும் , சீனிவாச ராமானுஜன் வாழ்ந்த வீட்டிற்கு நான் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தார் . மேலும், மொரிஷியஸ் நாட்டில் சீனிவாச ராமானுஜன் பெயரில் கணித ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பிற்கு தானே தலைமைப் பொறுப்பேற்று
உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version