கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரிப்பு!

கோடியக்கரை பறவைகள் சரணாலயலத்திற்கு, வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். பல்வேறு நாடுகளில் இருந்து ஃப்ளமிங்கோ, கொசு உள்ளான், செங்கால் நாரை, கடல்காகம் என 30 வகைக்கும் மேற்பட்ட பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

வெளிநாட்டுப் பறவைகளை காண பறவை ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் கோடியக்கரையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

Exit mobile version