கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து மரங்கள் உள்ளிட்டவைகள் கடத்தப்படுகிறதா? என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
ஓசூர், வனப்பகுதியில் இருந்து விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வது, அரிய வகை மரங்களை வெட்டி கடத்துவது போன்ற செயல்கள் நடப்பதை தடுக்கும் வகையில், தீவிர வாகன சோதனை செய்ய, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஓசூரில் இருந்து பாகலூர் செல்லும் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடி மற்றும் அந்திவாடி, ஜூஜூவாடி ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளில், வனத்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.