வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ

உத்தமபாளையம் அருகே அடிக்கடி கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீயினால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. கடும் பனி பொழிவினால் மரங்களின் இலைகள் கருகி கீழே கொட்டின. இந்தநிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால், கருகிய இலைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன. அவ்வப்போது காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிவதால் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்தாலும் சில மணிநேரங்களில் அதுவாகவே அணைந்துவிடுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version