எதற்கெல்லாம் இந்த ஹெல்ப்லைன் எண்களை அழைக்கலாம்

பெண்கள் பாதுகாப்பு :181
டெல்லியில் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு அமலுக்கு வந்த 181 உதவிஎண் இப்போது தமிழகத்திலும் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார்.
வரதட்சணை, பாலியல் சீண்டல், சட்ட ஆலோசனைகள், உளவியல் ஆலோசனைகள் போன்ற உதவிகளுக்கும்,
ஆபத்துக்காலங்களில் காவல்துறையின் உதவிபெற,
பெண்களுக்கெதிரான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளின் மீது புகார் அளிக்க,
மனரீதியான குழப்பங்களுக்கு ஆலோசனை பெற,
பெண்கள் நலத்திட்டங்கள் குறித்து தெளிவு பெற,
போன்ற உதவிகளுக்கும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
சென்னையில் முன்பே இயங்கிவந்த (101) அம்மா கால் சென்டரின் ஒருபகுதியில் இந்த 181 சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த சேவையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாணவர் உதவி சேவை -14417
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களால் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான முழுநேரச் சேவை எண்.
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆலோசனை
உதவித்தொகை குறித்த ஆலோசனை
பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள்,
மேற்படிப்பு குறித்த ஆலோசனை
மாணவர்களின் தேர்வுக்கால மனச்சோர்வுக்கு ஆலோசனைகள்
உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்த எண்ணை மாணவர்களும் பெற்றோர்களும் அழைக்கலாம்.
24 மணி நேரமும் மாணவர்களுக்காக செயல்படவிருக்கிறது இந்த உதவி எண்.. இதற்கு முன் 108 ஆம்புலன்ஸ் சேவையைக் கவனித்து வந்த GVK-Emergency Management and Research Institute (EMRI) இதைத் திறம்படச் செய்து வருகிறது.
கடலோரப் பாதுகாப்பு -1093
தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குள் 24 மணி நேரமுமியங்கும் ஒரு கடலோடிப் பகுதிகளுக்கான உதவி எண் 2009 நவ,25 அன்று அமலுக்கு வந்த்து.
இந்த உதவி எண்ணை கீழ்க்கண்ட காரணங்களுக்காக அழைக்கலாம்.
• கடலோரம் நடக்கும் தவறுகள் குறித்து தகவல் தர,
• இக்கட்டு சமயங்களில் காவல்துறையின் உடனடி உதவி பெற,
• 13 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 83 சோதனைச்சாவடிகள் ,12 கடலோரக் காவல் நிலையங்கள் மூலம் அண்மையிலிருக்கும் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ள,
• சென்னை, நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் வரையிலான 1076 கிமீ கடலோரப் பகுதியில் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
போக்குவரத்துக் காவல் – 103
பெருநகரங்களில் போக்குவரத்துச் சீர்மையை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த எண்னை,
போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தர,
போக்குவரத்துத்துறை மீதான கருத்துக்கள் மற்றும் புகார்களை பதிவு செய்ய
சீரற்ற போக்குவரத்து நிலவும் பகுதிகளில் காவலரின் உதவி தேவையைத் தெரிவிக்க,
என போக்குவரத்தின் சீர்மைக்கு உதவும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு இந்த அழைக்கலாம்.

இலவச மருத்துவ உதவி – 104
மருத்துவச் சேவையை மக்களின் தேவைக்கேற்ப வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட 104 சேவை,
மாநிலம் முழுக்க உடல்நலப் பூரணத்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு சுகாதார அமைபுத் திட்டம் முன்னெடுத்த இந்த மருத்துவ உதவி எண் நேரடியாக மருத்துவர்கள் குழு மூலம் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறது.
இந்த 24 மணிநேர இலவச சேவை எண்ணுக்கு
உணவுக்கட்டுப்பாடு
நோய்கள் குறித்த சந்தேகங்கள்,
உடனடி மருந்துகள், அல்லது வழிமுறைகள்
ஊரகப் பகுதி மருத்துவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும்
ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ளிட்ட எல்லா விதமான மருத்துவ ஆலோசனைகளுக்கும் இந்த எண்னை வயது வரம்பின்றி எல்லோரும் தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version