தமிழகத்தில் இருந்து உணவு பொருட்கள் கடத்தல் குறைந்துள்ளது

தமிழகத்தில் இருந்து உணவு பொருட்கள் கடத்தல் குறைந்திருப்பதாக தமிழ்நாடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் பிரதீப் வீ பிலிப் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிககள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரதீப் வீ பிலிப் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கூட்டுறவு கடைகளில் இருந்து உணவு பொருட்கள் கடத்தல் குறைந்திருப்பதாகவும், கடத்தலில் யாரும் ஈடுபடாத அளவிற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Exit mobile version