வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

பரமத்திவேலூரில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லங்களில், சர்க்கரை கலப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வெல்ல உற்பத்தி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் அச்சு, உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் இங்கு தயாரிக்கப்படும் வெல்லங்களில் கூடுதல் சுவைக்காக அஸ்கா சர்க்கரையை கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறையின் நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டார். இதில் வெல்லம் தயாரிக்கும் முறைகள் மற்றும் அஸ்கா சர்க்கரை கலக்கப்படுகிறதா? எனவும் சோதனை மேற்கொண்டார். மேலும் ஏலத்திற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அச்சு, உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரைகளின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக எடுக்க உத்தரவிட்டார்.

Exit mobile version