பழனியில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயிலடி சாலையில் சிக்கந்தர் என்பவருக்கு சொந்தமான, அசைவ உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பிரியாணி கெட்டுப் போயிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு ஆணையரகத்தில், ஆதாரத்துடன் தகவல் அளித்தார்.
அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அந்த கடையில் காலாவதியான பால், சிக்கன் ஆகியவை இருந்தது தெரியவந்தது. உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.