தாளவாடி பகுதியில் பூத்து குலுங்கும் மே மாத பூக்கள்

தாளவாடி பகுதியில் பூத்து குலுங்கும் மே மாத பூக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் மே மாத பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. கடந்த மாதம் வரை மரங்களில் இலைகள் உதிர்ந்து வெற்றுக்கூடாக காணப்பட்டது. மே மாதம் தொடங்கிய நிலையில், மரங்களில் அதிகளவில் மே மாத பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

தாளவாடி, கொங்கள்ளி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பூத்திருக்கும் இந்த பூக்கள், இயற்கையே பூந்தோரணம் கட்டியிருப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தாளவாடி பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள், மே மாத பூக்களை ரசித்தபடி செல்கின்றனர்.

Exit mobile version