நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் முதுமலை வனப் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மே மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, பல்வேறு வகையிலான தாவரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. இவற்றில் டிலோனிக்ஸ் தாவர வகையை சேர்ந்தது மே பிளவர் மரங்கள் அதிகளவில் உள்ளன. சிவப்பு நிறத்தில் பூக்கும் இந்த மலர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். புலிகள் வனப் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வாகனங்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மே மலர்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன.
சாலையின் இருபுறங்களிலும் குடை விரித்தார் போன்று காட்சி அளிக்கும் அழகை சுற்றுலா பயணிகள் புகைப்படும்
எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.