வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், 71 அடி உயரம் கொண்ட, வைகை அணையின் நீர் மட்டம், 66 அடியை எட்டி உள்ளது. இதன் காரணமாக, கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகையாற்றின் கரையோர மக்கள் அனைவரும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version