வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

நேற்று 28/03/2023 மாலையில் நிலவுக்கு அருகாமையில் ஒரே நேர்க்கோட்டில் வியாழன், புதன், வெள்ளி, யுரேனஸ். செவ்வாய் போன்ற கோள்கள் காட்சியளிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது விஞ்ஞான ரீதியாக முடியாது என்பதுதான் உண்மை. மாலை 6.36 மணியிலிருந்து 7.15 மணிவரை இந்த நிகழ்வு வானில் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள்.

இக்காட்சியினை நேற்று பலர் புகைப்படங்கள் எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டனர். முக்கியமாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த நிகழ்வினை வீடியோ எடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவினை நெட்டிசன்கள் பகிர்ந்தார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அந்த வீடியோ காட்சியில் இருப்பது வியாழன், புதன், வெள்ளி, யுரேனஸ். செவ்வாய் ஆகிய கோள்களின் நேர்வரிசை அல்ல. அது வியாழன் கோளும் அதன் துணைக்கோள்களும் ஆகும். அமிதாபச்சன் வெளியிட்ட காணொளியானது ப்ரதமேஷ் தாலவி என்கிற யூடியூப் பயனாளர் ஜனவரி 26 ஆம் தேதி பகிர்ந்த வீடியோ ஆகும். அந்த வீடியோவில் இருப்பது வியாழன் கோளும் அதன் துணைக்கோள்களான லோ, யூரோப்பா, காலிஸ்டோ, கனிமேடு ஆகியவையே ஆகும். மார்ச் 28 அன்று, புதன்,வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் நிலவுடன் ஒன்றிணைந்திருந்த நிகழ்வு THE VIRUTUAL TELESCOPE PROJECT, SPACE.COM , EARTHSKYஆகியோரால் பகிரப்பட்டுள்ளது. அதற்கும், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள வீடியோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

Exit mobile version