திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விஷ காளானை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தளவாய் பட்டினத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வரும்போது சாலையோரத்தில் விளைந்த காளானை பறித்து வீட்டிற்கு எடுத்து வந்தனர். இதனை சமைத்து சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோரும், உணவருந்திய அரைமணி நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர். இதனை கண்ட உறவினர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.