17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் முதல் வாரத்தில் தொடக்கம்

மக்களவை கூட்டத்தொடர் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

17-வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதையடுத்து 31-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. 

மேலும் மக்களவை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version