ரஃபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த ராணுவ விழா ஒன்றில் ராணுவ பாதுகாப்பு உற்பத்தி பிரிவு செயலாளர் அஜய்குமார் பேசுகையில், பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட இருப்பதாக கூறினார்.
ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்னும் 2 மாதத்தில் முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்படும் என்றும், சட்ட விதிகளின்படிதான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றார். இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம், வானில் இருந்து இலக்குகளை துள்ளியமாக தாக்கும் திறனை கொண்டிருப்பதால், இந்திய ராணுவத்துக்கு பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.